வாகன விபத்தில் உயிரிழந்த மனைவி; கணவர் முடிவால் உறவினர்கள் அதிர்ச்சி

வாகன விபத்தில் உயிரிழந்த மனைவி; கணவர் முடிவால் உறவினர்கள் அதிர்ச்சி

மனைவி வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20ஆம் திகதி ஹொரணை, இங்கிரிய எலபட வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது.

வாகன விபத்தில் உயிரிழந்த மனைவி; கணவர் முடிவால் உறவினர்கள் அதிர்ச்சி | Wife Dies In Car Accident Shocked By The Husband Sவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய யுவதி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் அவரது கணவர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கணவனுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு கிடைத்து சென்ற போது மனைவி உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் வீட்டிற்கு வந்தவுடன் விஷம் குடித்துள்ளார். அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இங்கிரிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.