இன்றுகாலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி..!

இன்றுகாலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி..!

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (27) காலை முச்சக்கர வண்டியொன்று பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்றுகாலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி | Accident On Narammala Road Three Killed

இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினரால் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை நேற்று (26) மாலை திருகோணமலை - சேருநுவர காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றுகாலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி | Accident On Narammala Road Three Killed

மூதூர் தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் சிக்கியவர்கள் அவிசாவளையிலிருந்து திருகோணமலைக்கு வானில் சுற்றுலா வந்தவர்கள் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.