மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (26.01.2024) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஆவார்.

மட்டக்களப்பு - குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் நாவலடி பகுதியில் திருமணமாகி வசித்து வந்துள்ளார்.

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு | The Family Made The Wrong Decision In Batticaloa

இந்நிலையிலேயே இவர் இன்று குறித்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தமைக்கான காரணம் வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்