கடலில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் உயிரிழப்பு! மற்றொரு காணவில்லை
ஹம்பாந்தோட்டை குடாவெல்ல கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் களுத்துறையைச் சேர்ந்த 35 வயதுடைய சம்பத் குமார என்பவரே உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன 25 வயதுடைய கம்புருபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய உதார புஷ்பகுமார என்பவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
குடாவெல்ல கடற்பரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றுள்ள நிலையில், மூவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.