இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்!

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்!

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்! | Musician Ilayaraja Daughter Passed Away Sri Lanka

இந்த நிலையில் சற்றுமுன் பவதாரிணி காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியான பவதாரிணி சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்! | Musician Ilayaraja Daughter Passed Away Sri Lankaஇதேவேளை, நேற்றையதினம் (24-01-2024) இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.