நுவரெலியாவில் அதிகாலையில் துகள் பனிப்பொழிவு

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் பனிப்பொழிவு

நுவரெலியாவில் இன்று அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன.

அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் பனிப்பொழிவு | Snowfall In Nuwara Eliyaமேலும் பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் பனிப்பொழிவு | Snowfall In Nuwara Eliya

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் பனிப்பொழிவு | Snowfall In Nuwara Eliya