கட்டுநாயக்க நெடுஞ்சாலை கோர விபத்து : சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி

கட்டுநாயக்க நெடுஞ்சாலை கோர விபத்து : சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (2024.01.25) அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அவர் பயணித்த சொகுசு கார், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க நெடுஞ்சாலை கோர விபத்து : சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி | Katunayake Rode Sanath Nishantha Accidentஇந்நிலையில் விபத்தில் கார் பாதுகாப்பு வேலியில் மோதியதில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடி என்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஆவார்.