A9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்து
A9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மாங்குளத்திற்கும், கனகராயன்குளத்துக்கும் இடையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுவதை தவிர்ப்பதற்கு டிப்பர் ஒன்று முயன்ற போது, எதிரே வந்த டிப்பருடன் மோதியது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிள்ளனர்.