வடக்கு கடற்படையின் கட்டளை தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சனா பனாகொட!
ரியர் அட்மிரல் காஞ்சனா பனாகொட வடக்கு கடற்படைப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். வடக்கு கடற்படைப் பகுதியின் கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட அவர்கள் ஜனவரி 22ம் திகதி கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வடக்கு கடற்படை கட்டளை தளபதி கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்கப்பட்டார். அதன் பின்னர், முன்னர் பதவி வகித்த ரியர் அட்மிரல் அருண தென்னகோன், முறைப்படி
தனது பதவியை ஒப்படைத்ததன் பின்னர் தனது கடமைகளை இராதினாமா செய்தார்.
இதேவேளை, வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், வெளியேறும். தளபதியின் சேவைக்காக வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பிரியாவிடை அளித்தனர்.