கிளிநொச்சியில் கோரவிபத்து : ஒருவர் மரணம்

கிளிநொச்சியில் கோரவிபத்து : ஒருவர் மரணம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இன்று (2024.01.24) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கோரவிபத்து : ஒருவர் மரணம் | Horrible Accident In Kilinochchi One Deadபேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்ட நிலையில் எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.