கார் ஒன்றை மோதிய கடுகதி ரயில்

கார் ஒன்றை மோதிய கடுகதி ரயில்

மிதிகம ரயில் கடவையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் கார் ஒன்றை மோதியுள்ளது. இந்த விபத்தின்போது காரில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் செல்வதற்கான சமிக்ஞை போடப்பட்டிருந்த நிலையில் , கார் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.