நாட்டின் இன்றைய வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் இன்றைய வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம்

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23) பி.ப. மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ சில இடங்களில் பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

நாட்டின் இன்றைய வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் | Today S Weather In The Country

அத்துடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது