அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 50 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 92 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 325 ரூபாய் 37 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபாய் 06 சதமாக காணப்பட்டது.