தென்னிந்திய நடிகைகளின் பங்கேற்புடன் மலையகத்தில் நடந்த தேசிய தைப்பொங்கல் விழா

தென்னிந்திய நடிகைகளின் பங்கேற்புடன் மலையகத்தில் நடந்த தேசிய தைப்பொங்கல் விழா

தேசிய தைப்பொங்கல்‌ விழா ஹட்டனில்‌ கலை, கலாசார நிகழ்வுகள்‌, தமிழர்களின்‌ பாரம்பரிய விளையாட்டுகள்‌, போட்டிகள்‌ என பிரமாண்டமான முறையில்‌. ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) கொண்டாடப்பட்டது.

நீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்‌ அபிவிருத்தி அமைச்சின்‌ ஏற்பாட்டில்‌ நடைபெற்ற இந்நிகழ்வுக்கு. புத்தசாசன, சமய மற்றும்‌ கலாசார அலுவல்கள்‌ அமைச்சும்‌ ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. ஜனாதிபதி ரணில்‌ விக்கிரமசிங்க, பிரதமர்‌ தினேஷ்‌ குணவர்தன ஆகியோர்‌ வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்‌.

புத்தசாசன, சமய மற்றும்‌ கலாசார அலுவல்கள்‌ அமைச்சர்‌ விதுர விக்கிரமநாயக்க நீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்‌ அபிவிருத்தி அமைச்சர்‌ ஜீவன்‌ தொண்டமான்‌, இ.தொ.கா.வின்‌ தலைவரும்‌, கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில்‌ தொண்டமான்‌, வடக்கு மாகாண ஆளுநர்‌ சார்ள்ஸ்‌, மத்திய மாகாண ஆளுநர்‌ லலித்‌ யூ. கமகே, இ.தொ.காவின்‌ தவிசாளரும்‌, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன்‌, அமைச்சுகளின்‌ செயலாளர்கள்‌, நுவரெலியா மாவட்ட அரச
அதிபர்‌, அரசாங்க அதிகாரிகள்‌, உத்தியோகத்தர்கள்‌ உட்பட பலர்‌ நிகழ்வில்‌ பங்கேற்றிருந்தனர்‌.

அத்துடன்‌, தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஸ்‌, சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கும்‌ பங்கேற்றனர்‌.

1008 பொங்கல்‌ பானைகள்‌ வைக்கப்பட்டு, கோலப்போட்டி, சிலம்பாட்டம்‌, தப்பாட்டம்‌ என பல கலை, கலாசார அம்சங்களுடன்‌ விழா நடைபெற்றது.