இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (22.01.2024) வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதற்கமைவாக  வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு | Today Weather Condition In Sri Lankaமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.