இன்றைய தினத்துக்கான வானிலை எதிர்வுகூறல்

இன்றைய தினத்துக்கான வானிலை எதிர்வுகூறல்

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  இன்றைய தினத்துக்கான (19.01.2024)  வானிலை எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்றைய தினத்துக்கான வானிலை எதிர்வுகூறல் | Today Weather Condition In Sri Lankaமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இன்றைய தினத்துக்கான வானிலை எதிர்வுகூறல் | Today Weather Condition In Sri Lanka

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.