திருமண நிகழ்விற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

திருமண நிகழ்விற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கம்பஹா மாவட்டம், ஜா எல, குடஹாகபொல பகுதியில் ரயிலுடன் கார் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (17-01-2024) மாலை ஜா எல, குடஹாகபொல புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

திருமண நிகழ்விற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Ja Ela Railway Station Car Collided With A Train

குறித்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், காரில் பயணித்த 4 பேர் ஆபத்தான நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

காரில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியுடன் தாய் மற்றும் மகள் ஆகியோரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

திருமண நிகழ்விற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Ja Ela Railway Station Car Collided With A Train

மேலும் இவர்கள் அனைவரும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ரயில் கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் ஏற்றிச் செல்லும் புகையிரதம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.