கொழும்பில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளியான பல தகவல்கள்!

கொழும்பில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளியான பல தகவல்கள்!

மட்டக்குளி, ரண்டிய உயன வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “புகுடு கண்ணா”வின் போதைப்பொருள் வலையமைப்பின் பணப் பரிவர்த்தனைகளை நிர்வகித்தவர்களில் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளியான பல தகவல்கள்! | Colombo Shoot Murder Bada Ranji Details Revealed

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்றிரவு (15-01-2024) 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த செந்தில் ஆறுமுகம் துஷ்யந்த் மீது முச்சக்கர வண்டியில் வந்த மூன்று இனந்தெரியாத நபர்களே நேற்றிரவு 08.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளியான பல தகவல்கள்! | Colombo Shoot Murder Bada Ranji Details Revealed

சம்பவத்தின் போது, அவரது மார்பு மற்றும் இடது கையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள எதிரி கும்பலால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு-வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.