பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கு நேற்று (2023.12.29) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர்தரப் பரீட்சை தொடர்பான செயற்பாடுகளுக்கு தடை  

பரீட்சை முடியும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் எனவும் அதன்படி தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் | Important Notification Issued Department Exam

இவ்வருட உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2298 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.