இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்றையதினம் (29.12.2023) ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29.12.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Dollar Rate In Sri Lanka Today

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 250.14ரூபாவாகவும், கொள்வனவு விலை 239.39ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 365.82ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 351.48ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 420.39 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 405.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.