2 வயது குழந்தையுடன் தற்கொலை செய்துக் கொண்ட இளம் தாய்.

2 வயது குழந்தையுடன் தற்கொலை செய்துக் கொண்ட இளம் தாய்.

இரத்தினபுரி - கெஹெல்ஓவிடிகம பிரதேசத்தில் தொடர் குடியிருப்பு அறையொன்றிலிருந்து இளம் தாய் மற்றும் 2 வயது குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

2 வயதுடைய ஆண் குழந்தையும், சிவநாதன் வசந்தகுமாரி என்ற 21 வயதுடைய  இளம் தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தாய் குழந்தையை கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

2 வயது குழந்தையுடன் தற்கொலை செய்துக் கொண்ட இளம் தாய் | A Young Mother Suicide With A 2 Year Old Child

இவரது கணவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபத பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.