தமிழர் பகுதியில் வெள்ளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்.

தமிழர் பகுதியில் வெள்ளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்.

தலைமன்னார் - செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மரியதாஸ் ரொனால்ட் ரீகன் எனும் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கிராமத்தில் உள்ள சுமார் 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள தனது இல்லத்தில் கடந்த (26.12.2023) ஆம் திகதி இரவு தனது வேலையை முடித்த நிலையில் உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

தமிழர் பகுதியில் வெள்ளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் | Body Found Floating In Flood In Talaimannar

உறக்கத்திற்கு சென்ற நிலையில் நேற்று காலை (28.12.2023) குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கடந்த இரண்டு நாட்கள் காணாத நிலையில், உயிரிழந்த நபரின் நண்பர் ஒருவர் நேற்று காலை இவரை அவரது இல்லத்திற்குத் தேடிச்சென்றபோது மழை வெள்ளத்தில் இறந்துகிடந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக குறித்த நபர் உரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்து தலைமன்னார் போலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

இவரது சடலம் தண்ணீரில் இருந்து மீட்டு வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் வெள்ளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் | Body Found Floating In Flood In Talaimannar

குறித்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸ் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மனைவி பிள்ளைகள் மழை வெள்ளம் காரணமாக அருகாமையில் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இவர் தனது இல்லத்தில் உறங்கச் சென்ற நிலையிலையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.