இலங்கையில் மூன்று பாடசாலைகளில் கைவரிசையை காட்டிய மாணவர்கள் இருவர் சிக்கினர்!

இலங்கையில் மூன்று பாடசாலைகளில் கைவரிசையை காட்டிய மாணவர்கள் இருவர் சிக்கினர்!

புத்தளம் மாவட்டம் - முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது நடவடிக்கையின் போது, மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக், வைபை ரவுட்டர், புரஜெக்டர் உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் மூன்று பாடசாலைகளில் கைவரிசையை காட்டிய மாணவர்கள் இருவர் சிக்கினர்! | Mundal School Money Equipment Theft Student Arrestமுந்தல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை உள்ளிட்ட இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , உபகரணங்களையும் பணத்தையும் திருடியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாடசாலைகளில் நிர்வாக காரியாலயத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தி மாணவர்கள், 30 ஆயிரத்திற்கும் அதிக பணத்தை திருடி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் மூன்று பாடசாலைகளில் கைவரிசையை காட்டிய மாணவர்கள் இருவர் சிக்கினர்! | Mundal School Money Equipment Theft Student Arrestஇதேவேளை, இரண்டு முறை குறித்த பாடசாலைகளுக்குள் புகுந்து பணத்தை திருடிய மாணவர்கள், பணம் கிடைக்காத போது அந்த பாடசாலைகளில் இருந்த உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.