வெதுப்பக உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

வெதுப்பக உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

 இலங்கையில் எதிர்வரும் (01.01.2024) ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள்  அதிகளவில்  பாதிப்படைவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரி அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது 15 சதவீதமாக காணப்படுகின்ற வெட் (VAT) வரியின் ஊடாக வெதுப்பக தொழிற்துறை பாதிப்படைந்த நிலைமையில் உள்ளது.

வெதுப்பக உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள தகவல் | Information By Bakery Owners In Sri Lanka

இந்தநிலையில் அதனை 18 சதவீதமாக அதிகரிப்பது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போதைய நிலையில் புதிய வரி திருத்தத்துக்கு அமைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படுமாயின் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

அத்துடன் வெதுப்பக உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக வீழ்ச்சியடையும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.