சிறையில் தாக்குதலுக்கு உள்ளான கைதி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்.

சிறையில் தாக்குதலுக்கு உள்ளான கைதி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த 24 ஆம் திகதி களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(26) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறையில் தாக்குதலுக்கு உள்ளான கைதி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம் | An Inmate Was Assaulted And Died In Hospitalஅத்தோடு, சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகர் களுத்துறை வடக்கு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதுடன், விசேட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கரவிட்ட, மல்காவையில் வசித்து வந்த பி.ஜி. சுனில் என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சிறையில் தாக்குதலுக்கு உள்ளான கைதி உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம் | An Inmate Was Assaulted And Died In Hospitalமேலும், களுத்துறை வடக்கு பிரதான காவல்துறை பரிசோதகர் தமித் ஜயதிலக தலைமையில் குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.