நத்தார் தினத்தில் அரங்கேறிய பயங்கரம்; அடித்துக் கொல்லப்பட்ட நபர்.
கிறிஸ்மஸ் விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் வெலிக்கடை, வல்பொல, விஜிதபுர மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அங்கொட வல்பொல விஜிதபுர மாவத்தையைச் சேர்ந்த 46 வயதுடைய ரேணுகா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.