திருகோணமலை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

திருகோணமலை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

திருகோணமலை நாமல்வத்தை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று (2023.12.23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

கிண்ணியா -குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீக் முகமது முஸம்மில் (34வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு | Man S Body Was Recovered From Field Trincomalee

கிண்ணியாவில் இருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு வருகை தந்து மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக கத்தியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் மாலை நேரமாகியும் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்கு வராததால் வயல் பகுதிக்கு தேடி சென்றதாகவும் இதே வேளை வயலுக்குள் வரம்பில் விழுந்து கிடந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.