யாழ் காங்கேசன்துறை ரயில் மோதி ராகமையில் ஒருவர் பலி.
ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் யாழ் காங்கேசன்துறை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த டீ.பீ. அத்தாநாயக்க என்ற 69 வயதுடையவராவார். கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சடலத்திற்கு அருகிலிருந்து உயிரிழந்தவரது 600 ரூபா பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் பயணப்பை என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.