பண்டிகைக் காலத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கேக் விற்பனை.

பண்டிகைக் காலத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கேக் விற்பனை.

நாடளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை 50 வீதம் குறைவடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கிலோ அளவில் கேக் கொள்வனவில் ஈடுபட்டு வந்த வாடிக்கையாளர்கள் இம்முறை கிராம் அளவில் மட்டுப்படுத்தியுள்ளதாக என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் வீடுகளில் கேக் தயாரிக்கும் நடவடிக்கை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகைக் காலத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கேக் விற்பனை | Cake Sales Fall During The Festive Season