காணாமல்போன இரட்டை குழந்தைகளின் தாயார் சடலமாக மீட்பு.
காலி- பலப்பிட்டிய மங்கட கடற்கரையில் புதன்கிழமை (20) பெண் ஒருவரின் சடலத்தை அஹுங்கல்ல பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இரட்டைகுழந்தைகளின் தாயான குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர் கல்வெஹர, அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் அவரது கணவர் அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அறுவைச் சிகிச்சையின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், அறுவை சிகிச்சையின் வலி தாங்க முடியாதுள்ளதாக தெரிவித்து அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றும் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபடுகின்றது.