உறக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்.

உறக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்.

புத்தளத்தில் இளைஞர் ஒருவர்  தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரக்கல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஹசித் சந்தருவன் பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி காலையில் உயிரிழந்தவரின் பெற்றோர் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காலை 7.30 மணியளவில் சகோதரன் ஒருவர் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் எழுந்திருக்கவில்லை எனவும் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கையடக்க தொலைபேசியில் பொருத்திய ஹியர் போன்களை காதில் அணிந்த நிலையில் உறங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

உறக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் | Young Man Died Mysteriously In His Sleep

அதன் பின்னர், அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவரின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.