தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் பலி.

தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் பலி.

கிளிநொச்சியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் பலி | A Family Member Was Killed In A Train Collision

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவயில் வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிள்  மோதியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.