உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 நீதிபதிகளுக்கு இடமாற்றம்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 நீதிபதிகளுக்கு இடமாற்றம்.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற நீதவான்கள் 54 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிச்சேவை ஆணைக்குழு உரிய இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருடாந்த இடமாற்றங்களின் கீழ் சேவைத் தேவைகளின் அடிப்படையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 நீதிபதிகளுக்கு இடமாற்றம் | Transfer Of 54 Judges With Effect From

இதன்படி, கடுவெல, பூகொட, மாரவில, களுத்துறை, மாத்தளை, எல்பிட்டிய, மொணராகலை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம, நீர்கொழும்பு, பண்டாரவளை, நுவரெலியா, மட்டக்களப்பு, கேகாலை, எல்பிட்டிய, பலப்பிட்டிய, மெதவாச்சி, நொச்சிகம, நாவுல, ஆனமடுவ, அகுனகொலபலஸ்ஸ மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய நீதவான்களுக்கும் இம்முறை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.