சுவர் இடிந்து விழுந்ததில் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.
பெலியத்த, ஹட்போதிய பிரதேசத்தில் பழைய வீடொன்றை இடிக்க முற்பட்ட போது அதன் சுவரின் அடியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெலியத்த ஹத்போதிய ஏகமுத்து மாவத்தையில் வசித்து வந்த ரஞ்சித் கங்கணம் ஆச்சாரி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரின் பழைய வீட்டின் சுவர்களை இடிப்பதற்காக தனது மகனுடன் சென்ற அவர், சுவர் ஒன்றில் இருந்து கதவு கைப்பிடியை அகற்ற முற்பட்ட போது, திடீரென சுவர் இடிந்து விழுந்து அதன் அடியில் புதையுண்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.