33 வயது நபரை கொலை செய்த 18 வயது இளைஞன்.

33 வயது நபரை கொலை செய்த 18 வயது இளைஞன்.

 கிராண்ட்பாஸ், புதிய களனி பாலத்திற்கு அருகில் உள்ள பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொலையைச் செய்த சந்தேகநபர், உயிரிழந்தவரிடம் கையடக்கத் தொலைபேசியைக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

33 வயது நபரை கொலை செய்த 18 வயது இளைஞன் | The 18 Year Old Killed The 33 Year Oldகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 14 மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.