மின்வெட்டில் இடம்பெற்ற சம்பவம்; சிக்கிய நபர்!
நேற்று முந்தினம் (9)நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டில் கண்டி - யட்டிஹலகல பிரதேசத்தில் உள்ள வீட்டொன்றிற்குள் நுழைந்து திருடிய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்று பத்துமணி நேரத்திற்குள் சந்தேக நபர் ஹலதெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் கொள்ளையிட்ட தொலைக்காட்சி பெட்டி மற்றும் கிரைண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.