இலங்கையில் பெற்ற பிள்ளைகளை 25,000 ரூபாவுக்கு விற்ற பெண்!

இலங்கையில் பெற்ற பிள்ளைகளை 25,000 ரூபாவுக்கு விற்ற பெண்!

தனது இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண் தான்பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளை தலா 25,000 ரூபாவுக்கு இருவருக்கு விற்ற நிலையில் , குழந்தைகளை வாங்கிய இரண்டு பெண்களும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் பெற்ற பிள்ளைகளை 25,000 ரூபாவுக்கு விற்ற பெண்! | Woman Who Sold Her Children For 25 000 Rupeesகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குழந்தைகளின் தாய் மற்றும் ஒரு குழந்தையை வாங்கிய பெண், மற்றைய குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் உள்லிட்டோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்த குழந்தைகளின் தாயார், கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.