இலங்கையில் மீண்டும் நீண்ட நேர மின்வெட்டா... மின்சார சபை வெளியிட்ட தகவல்!

இலங்கையில் மீண்டும் நீண்ட நேர மின்வெட்டா... மின்சார சபை வெளியிட்ட தகவல்!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 வது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் நீண்ட நேர மின்வெட்டா? மின்சார சபை வெளியிட்ட தகவல்! | Another Long Power Cut In Sri Lanka

இருப்பினும், மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் இல்லை என்றும், பராமரிப்பு காலத்தில் அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து தொடர்ந்து மின்சாரம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தித்தின் 3 வது மின்பிறப்பாக்கி எதிர்வரும் 29ஆம் திகதி தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.