பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம்; ஆபத்தான நிலையில் பெண்.

பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம்; ஆபத்தான நிலையில் பெண்.

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம் அடைந்துள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

தனியார் பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை மோதி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம்; ஆபத்தான நிலையில் பெண் | Three Injured In Bus Collision Including Girlவிபத்தில் காயமடைந்த மூன்று பெண்களும் ஹலாவத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த சிறுமி பாடசாலை முடிவடைந்து தாயுடன் வீதியில் சென்று கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம்; ஆபத்தான நிலையில் பெண் | Three Injured In Bus Collision Including Girl

விபத்தில் காய யமடைந்த வயோதிபப் பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதேசவாசிகள் தனியார் பஸ்ஸை தாக்கியுள்ள நிலையில் பஸ் சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.