தமிழர் பகுதியில் பெரும் பரபரப்பு: அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்!

தமிழர் பகுதியில் பெரும் பரபரப்பு: அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்!

வவுனியாவில் உள்ள பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்றைய தினம் (14-12-2023) தரணிக்குளம் - குறிசுட்ட குளம் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் பெரும் பரபரப்பு: அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்! | Woman S Body Was Recovered In Vavuniya

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தரணிக்குளம் - குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அயலவர்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அந்தச் சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் பெரும் பரபரப்பு: அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்! | Woman S Body Was Recovered In Vavuniya

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் எனத் தடயவியல் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.