ஒரேகுடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக; பலாங்கொடயில் துயரம்.
பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் நேற்று முன்தினம் (13) ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.