பொலிஸ் நிலையத்துள் தகாத உறவு; பெண் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

பொலிஸ் நிலையத்துள் தகாத உறவு; பெண் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குளியலறைக்கு வரவழைத்து ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் , பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒழுக்கமற்ற வகையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்துள் தகாத உறவு; பெண் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்! | Improper Relationship Within The Police Stationஇந்நிலையில் இருவரையும் குளியலறையில் பார்த்த மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக களனி பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையையடுத்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (13) முதல் இந்த பணித்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.