மழைவீழ்ச்சி அதிகரிப்பு : மின் கட்டணத்தில் திருத்தம்.

மழைவீழ்ச்சி அதிகரிப்பு : மின் கட்டணத்தில் திருத்தம்.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இந்நிலை தொடரும் பட்சத்தில் இந்த நிவாரணத்தை வழங்க முடியும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரான மின்சார பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவிக்கின்றார்.

இதேவேளை தற்போது தேசிய மின்சார உற்பத்தியில் 52 வீதம் நீரினால் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மழைவீழ்ச்சி அதிகரிப்பு : மின் கட்டணத்தில் திருத்தம் | Rainy Weather Revision In Electricity Charges

மின் உற்பத்தி நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.