ரம்புக்கனையில் பிறந்தநாளை கொண்டாட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்!

ரம்புக்கனையில் பிறந்தநாளை கொண்டாட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்!

ரம்புக்கனையில் உள்ள போலகம பாலத்திற்கு அருகில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மா ஓயாவில் நீராடச் சென்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனையில் பிறந்தநாளை கொண்டாட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்! | Rambukkana Youth Went Swimming Drownedநண்பர்கள் குழுவுடன் பிறந்தநாள் விழாவை நடத்துவதற்காக குறித்த இடத்திற்குச் சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞரை தேடும் பணியை பொலிஸ் கடற்படை பிரிவினரும் கடற்படையினரும் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.