தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு.

தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு.

குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி புர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு | Foreigner Dies In Fire Accident Colomboவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட தீ பரவலினால் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.