ஹோட்டல் நீச்சல் குளத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்.
பெந்தோட்டையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்து இரண்டு வயதும் மூன்று மாதமும் உடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அயூப் அமானுல்லா என்ற குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
கொழும்பு, திம்பிரிகஸ்யா பிரதேசத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று பெந்தோட்டை பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (10) மாலை இந்த குழந்தை பெற்றோருக்கு தெரியாமல் குளத்தில் விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குழந்தை அறையில் இல்லாததால், தாயும் தந்தையும் தேடியபோது, ஹோட்டல் மைதானத்தில் உள்ள நீச்ச் குளத்தில் மிதந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பெந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
