நேர்முகத் தேர்வுக்காக வவுனியா நோக்கிப் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

நேர்முகத் தேர்வுக்காக வவுனியா நோக்கிப் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

ஹொரவப் பொத்தானை - கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (10.11.2023) காலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

நேர்முகத் தேர்வுக்காக வவுனியா நோக்கிப் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி! | Accident Traveled To Vavuniya For The Interviewவாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேர்முகத் தேர்வுக்காக வவுனியா நோக்கிப் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி! | Accident Traveled To Vavuniya For The Interview

அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாரதியின் அசமந்தத்தினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.