பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்; மூவருக்கு நேர்ந்த துயரம்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்; மூவருக்கு நேர்ந்த துயரம்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே நேற்று (09) இரவு ஏற்பட்ட மோதலில் , 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பல் மருத்துவ பீட மாணவர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்; மூவருக்கு நேர்ந்த துயரம் | Peradeniya University Students Clashபேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் பல் மருத்துவ பீட மாணவர்கள் ஆகிய இரு மாணவ குழுக்களிடையிலேயே நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.