கழிவறை கிருமிநாசினியை குடித்ததால் வைத்தியசாலையில் அனுமதி; 14 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்

கழிவறை கிருமிநாசினியை குடித்ததால் வைத்தியசாலையில் அனுமதி; 14 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்

கொழும்பு - நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியை கொடூரமாக தாக்கி கழிவறை கிருமி நாசினியை குடித்து விட்டு சாவு என்று கூறி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

தலைமை வார்டன், ஊழியர் ஒருவரின் திட்டுதல் மற்றும் தாக்குதலை தாங்க முடியாத 14 வயதுச் சிறுமி, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இதையடுத் சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விசாரணையில், கடந்த (06.11.2023) ஆம் திகதி மதியம் அனாதை இல்லத்தின் தலைமை காப்பாளரும், சமையலறை பணிப்பெண்ணும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை சிறுமி குடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கழிவறை கிருமிநாசினியை குடித்ததால் வைத்தியசாலையில் அனுமதி; 14 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம் | Drinking Toilet Cleaner Tragedy To14 Year Old Girl

வார்டன் மற்றும் சமையலறைப் பணிப்பெண் ஆகியோர் கிருமி நாசினிகள் அடங்கிய பாட்டிலை சிறுமியின் அருகில் வைத்து, 'குடித்து, செத்து விடு' என்று கூறி மேலும் அடித்து துன்புறுத்தியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.