இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை.

இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை | Today Weather Condition In Sri Lanka

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது. 

இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை | Today Weather Condition In Sri Lanka